இந்தியாவிடமிருந்து உலக நாடுகள் பாடம் கற்க வேண்டும் - இளவரசர் சார்லஸ் புகழாரம்

கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவது எப்படி என்பதை உலக நாடுகள் இந்தியாவிடமிருந்து கற்று கொள்ள வேண்டும் என்று இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் தெரிவித்துள்ளார்.


இங்கிலாந்து தலைநகர் லண்டனில் 'இந்தியா குளோபல் வீக்' உச்சி இந்திய உலகளாவிய வார உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த உச்சி மாநாட்டில் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் காணொலி காட்சி மூலமாக உரையைாற்றினார.

அப்போது பேசிய அவர், “இந்தியாவின் நிலையான வாழ்க்கை முறை குறித்து புகழ்ந்து பேசினார். கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் உலக நாடுகள் இந்தியாவிடம் இருந்து நிலையான எதிர்காலத்தை உருவாக்குவது குறித்து பாடம் கற்று கொள்ள வேண்டும்

இந்தியாவில் தரமான கல்வி மற்றும் சுகாதார சேவையை வழங்குவதற்காக பிரிட்டிஷ் ஆசிய அறக்கட்டளை மற்றும் பிற நிறுவனங்களுடன் 'சமூக நிதி' பயன்படுத்துவதில் இங்கிலாந்து மற்றும் இந்தியாவும் ஒத்துழைத்து வருகின்றன.

இந்தியாவிடம் இருந்து,பண்டைய யோக ஞானத்தை கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது. இந்தியா எப்போதும் இதை புரிந்து கொண்டது. அதன் தத்துவமும், மதிப்புகளும் நிலையான வழியை வலியுறுத்துகின்றன.

புதிய வேலை வாய்ப்புகள், புதிய தொழில்கள் மற்றும் சந்தைகளில் உண்மையான நிலைத்தன்மையுடன் வேரூன்றியுள்ளன. மேலும் நான் பல முறை இந்தியாவிற்கு வந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்தியாவின் பன்முகத்தன்மை என்னை ஆச்சரியத்தில் முழ்கடித்துள்ளது. இது தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் உத்வேகம் அளித்தது“ என்றுள்ளார்.