நீட் தேர்வில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? - செங்கோட்டையன் விளக்கம்.

தமிழகத்தில் நீட் தேர்வு இல்லாத நிலைமை வரவேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


ஈரோடு மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய  செங்கோட்டையன், தமிழக முதலமைச்சர்,  பிரதமருடன் காணொளி மூலம் உரையாடிய போது நீட் தேர்வுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தியதாக கூறினார்.  நீட் தேர்வு இல்லாமல் மருத்துவ கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்பதே தங்களின் நிலைபாடு என்றும் அமைச்சர் கூறினார்.


இந்நிலையில், செப்டம்பருக்குள் கல்லூரிகளுக்கான இறுதி தேர்வை நடத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியிருந்த நிலையில், தற்போது ஆன்லைனிலும் தேர்வு நடத்த முடியாத நிலை உள்ளதால்,  கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுக்கான உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் நோய்த்தொற்றின் தன்மைக்கேற்ப மாநிலங்களே இறுதிதேர்வை நடத்த அனுமதிக்க வேண்டும் என மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.