தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு இல்லை  - அமைச்சர் காமராஜ்  தகவல்

தமிழகத்தில் எந்த இட்த்திலும் குடி நீர் தட்டுபாடு இல்லையென தமிழக உணவு துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்


. திருவாரூரில்  செய்தியாளர்களை சந்தித்த காமராஜ், தமிழகம் முழுவதும் டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்கள் என சுமார் 521 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருவதாகவும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்ட நாள் முதல் இந்த ஆண்டுதான் வரலாற்றில் இல்லாத அளவிற்கு சுமார் 26 லட்சத்து 24 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எடுத்து வரும் சிறப்பான நீர் மேலாண்மை திட்டங்களால் தமிழகத்தில் எங்கும் குடிநீர் தட்டுப்பாடு விவசாயத்திற்கு நீர் தட்டுப்பாடு இல்லை. கடந்த ஜூன் மாதம் அரசு அறிவித்த நிவாரணம் பொருட்களை வாங்காதவர்கள் இந்த மாதம் பத்தாம் தேதி வரை நிவாரணப் பொருட்கள் ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையையும் பெற்றுக் கொள்ளலாம் என்று காமராஜ் கூறினார்,