இலங்கைத் தமிழர்களுக்கு கூடுதல் கவனம் செந்தில் தொண்டமான் சிறப்பு பேட்டி

இலங்கைத் தமிழர்களுக்கு கூடுதல் கவனம்:இலங்கை பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் சிறப்பு பேட்டி 


 


இலங்கையில் நாடாளு மன்றம் கலைக்க பட்டு விட்ட நிலையில், காபந்து அரசின் தலைவராக மஹிந்த ராஜபக்ச இருந்து வருகிறார். இந்தகாபந்து அரசில் இரண்டு தமிழ் அமைச்சர்கள், ஆறுமுக தொண்டமான், டக்ளஸ் தேவானந்தா பணியாற்றி வருகின்றனர். 15 பேர் அடங்கிய காபினெட் அமைச்சர்கள் அடங்கிய காபந்து அரசே இலங்கையில் செயலாற்றி வருகிறது. பிரதமரின் இணைப்பு செயலாரும் முன்னாள் அமைச்சருமான செந்தில் தொண்டமான் அவர்கள், தமிழர்கள் வாழம் பகுதிகளில் மட்டு மில்லாமல் ஒட்டு மொத்தமாக மக்களின் நலன் காக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். செந்தில் தொண்டமான் தமிழகத்தில் கல்லூரி படிப்பை படித்தவரும் கூட. 2007 ல் ஜல்லிகட்டு தடை உருவான சமயத்தி லிருந்து பல போராட்டங்களை முன் னின்று நடத்திய முக்கிய அமைப்பான ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சங்கம் மூலம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை தொடுத்து ஜல்லிகட்டு நடத்த போராடியவர்களில் முன்னோடி திகழ்ந்தவர் என்றும் கூறலாம். இந்த அமைப்பில் ஒண்டிராஜ், அம்பலத் அரசு, ஜல்லி கட்டு ராஜேஷ், சூரியூர் ராஜா உள்ளிட்டவர் களுடன் சேர்ந்து களமாடிய செந்தில் தொண்ட மான், தமிழகத்திற்கு புதிதான தானவர் அல்ல. தற்போது இலங்கை பிரதமரின் இணைப்பு செயலாளராக இருந்து வருகிறார். இலங்கை யில், ஆறுமுக தொண்டமான், டக்ளஸ் தேவானந்தா, அமைச் சர்கள் அதிகார அமைப்பில் மூன்றாவது முக்கிய நபராக இருந்து வருகிறார். இலங்கையில் கொரனோ தடுப்பு நடவடிக்கைகள் எப்படி கையாள படுகிறது குறித்து நமது சிட்டி கார்னர் மேலாண் ஆசிரியர் சுபாஷ் சந்திர போஸ்க்கு அளித்த சிறப்புப் பேட்டி பின்வருமாறு:


கேள்வி : பிரதமரின் இணைப்பு செயலாராக தங்கள் பணி குறித்து கூறுங்கள்?


செந்தில் தொண்டமான்: இலங்கையில், தற்போது காபந்து அரசு செயலாற்றி வரும் நிலையில், ஆறுமுக தொண்டமான், டக்ளஸ் தேவானாந்தா ஆகிய இரு தலைவர்கள் காபினெட் பணிகள் அமைச்சர்களாக பணியாற்றி வருகின்றனர். நானும் அமைச்சராக பணியாற்றி உள்ளேன். தற்போது பிரதமரின் இணைப்பு செயலாளராக இருப்பதால் மக்கள் தேவையை அரசுக்கு எடுத்துரைத்து அதை முழுமையாக நிறை வேற்ற வேண்டிய பொறுப்பில் பயணிக்க வேண்டி உள்ளது. கேள்வி: பொருளாதார மந்த நிலை உருவாகி வரும் நிலையில் வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு எவ்விதமான சலுகைகள் அளிக்கப்பட்டு உள்ளது? செந்தில் தொண்டமான்: வங்கி கடன்கள் பொறுத்த வரை வீட்டு கடன், வாகன கடன், தனிநபர்கடன், தொழிற் கடன் ஆகிய அனைத்தும் 6 மாதத்திற்கு பிறகு செலுத்தும் வகையில் உத்தரவிட பட்டு உள்ளது. இது மக்களுக்கு சரியான நிவாரணமாக அமையும் என்பதில் இந்த அரசு உறுதியாக நம்புகிறது. மேலும் மின்சார கட்டணம், தொலைபேசி கட் ட ணம் , குடி நீர் கட்டணம் ஆகியவற்றிக்கு கட்டணத்தை செலுத்த முடியாவிட்டாலும், அதன் சேவை பொது மக்களுக்குதடையின்றி வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.


கேள்வி : ஊரடங்கு காலத்தில் அரசு எப்படி அணுகியது ? நடைமுறை படுத்திய விதம பற்றி ?


செந்தில் தொண்டமான்: சாதரண நடுத்தர மக்கள் பாதிக்கபட கூடாது என்பதை அடிப்படையாக கொண்டாலும், நோய் தொற்று தீவிரத்தை முற்றிலும் அறுபடும் வண்ணம் நடவடிக்கை இருக்கும் முடிவுகள் எடுக்க பட்டன. அந்த வகையில், கடந்த 20ம் தேதியே இலங்கையில் முழு அடைப்புககான பணிகள் மேற்கொள்ள பட்டன. மேலும் முன்னதாக, வெளிநாட்டு பயணிகளை விமான நிலையத்தில் வைத்து முழு சோதனைகள் மேற்கொள்ள பட்டது. அவர்களை 14 நாட்கள் கண்காணிப்பில்வைக்கபட்டு பின்னர் அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். இலங்கையில் ஒட்டு மொத்தமாக ஊரடங்கை அறிவிக்காவிட்டாலும், 5 நாட்கள், மூன்று நாட்கள் யென நீட்டித்து அரசு உத்தரவிட்டது. தற்போது வரை நோய் தொற்று யென சந்தேகிகக் பட்ட 251 பேரில், 148 பேருக்கு வைரஸ் தொற்று உள்ளது யென அறிய பட்டுள்ளது. அவரகளில் 124 பேருக்கு தொடர் கண்கானிப்பில் உள்ளனர்.21 பேர் குணமடைந்துள்ளனர். மூன்று பேர் இறந்துள்ளனர்


கேள்வி : கொரொனா தடுப்பு நடவடிக்கைளில் பிரத் யேக மருத்துவ ஏற்பாடு கள் எப்படி மேற்கொள்ள பட்டுவருகிறது ?


பட்டுவருகிறது ? செந்தில் தொண்டமான்: ஐடிஎச் எனப்படும் கிருமி தொற்று மருத்துவமனையில் பாதிப்பு குள்ள வான வர்களுக்கு ஏற்பாடுகள் செய்ய பட்டுள்ளது . மருத்துவமனையில், வசதிகள் மேம்படுத்த பட்டு, நோய் அறிகுறிகள். தொடர் பரிசோதனை, தொடர் கண்காணிப்புகள், அதிக அக்கறை செலுத்தி வருகிறது. குணமானவர்கள் தொடர் கண்காணிப்பிலும் இருந்து வருகிறார்கள்.


 



கேள்வி : தமிழர்கள் வாழும் மலையக பகுதிகளில் மேற்கொள்ள பட்ட நடவடிக்கைகள் என்ன?


செந்தில் தொண்டமாண் : தேயிலை தோட்டங்களில், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் இருக்கிறார்கள். மலையக மக்களின் பாதுகாப்பிற்கும் அவர்களுக்கு தேவையான வேலைவாய்ப்பு திட்டங் களையும் அரசுக்கு கொண்டு சென்று பணியாற்றி வரும் ஆறுமுக தொண்டமான் முழு கவனத்துடன் பணியாற்றி வருகிறார். வடகிழக்கு மாகாணத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா செயலாற்றி வருகிறார். மலையக மக்கள் வாழும் இடங் களி லே யே அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரபடுவ தோடு, உணவு பொருட் கள், மருந்து பொருட்கள், மளிகை பொருட்கள், கிடைக்க வழி வகை செய்ய பட்டுள்ளது. மேலும் பின் தங்கியுள்ள மக்களுக்கு ரூபாய் 5000/ வழங்க அரசு பேர் உத்தரவு பிறப்பித்துள்ளது. வைரஸ் தாக்கம் குறையா பட்சத்தில் அத்தொகையை கொரொனா தொடர்ந்து வழங்க முடிவு செய்ய பட்டுள்ளது.


கேள்வி;வைரஸ் விழிப் புணர்வு குறித்த நடவடிக் கைகள் பற்றி சொல்லுங்கள்?


செந்தில் தொண்டமான்: இந்த நோய் குணபடுத்துவது சவாலான விஷயமாக இருப் பதற்கு காரணம் இதுவரை இந்நோய்க்கான மருந்து கண்டு பிடிக்க படவில்லை. இருப்பினும் நோய் தொற்று சங்கலியை உடைப்பதன் மூலமே இதனை தடுத்திட முடியும். முழுவீச்சில் மக்களுக்கு விழிப்புணர்வு தருதல், நோய் எதிர்ப்பு சக்தியை தரகூடிய உணவு முறைகளை மக்களிடையே கொண்டு செல்லுதல் ஒரு பக்கம்தீவிர படுத்தி வருகிறோம். அரசும் ஆயுர்வேத மருந்து பொருட்களை மக்களுக்கு விநியோகிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.